புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் பெருமளவானவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும் ஈழத்தில் இருக்கும் தங்கள் உறவுகளுக்காகவும் உழைத்து வருகின்றார்கள். அத்துடன் தமது பிள்ளைகளை அந்த அந்த நாட்டுக்காரப் பிள்ளைகளிலும் பார்க்க சிறப்பான முறையில் கல்வியில் ஊக்குவித்து தமது பிள்ளைகளை நல்ல நிலைக்கும் பலர் கொண்டு வந்துள்ளார்கள். ஈழத்தில் இருந்து சென்றவர்கள் பலரது பிள்ளைகள் அந்த அந்த நாடுகளில் நல்ல பதவிகளையும் வகித்து வருகின்றார்கள். அத்துடன் அங்கு சென்ற பல தமிழர்கள் பெரும் தனவந்தர்களாக உழைத்து முன்னேறியுள்ளார்கள். இதே வேளை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என பலர் தங்களைக் காட்டிக் கொண்டு ஏராளமான பணத்தை அந்தக் காலங்களில் சுருட்டி வைத்து தற்போது ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அலங்கோல வேலைகள் செய்து வருவதும் மறுக்க முடியாது. அவர்களின் விபரங்களையும் விரிவாக தொடராகத் தரவுள்ளோம்.
இதே வேளை ஈழத்தில் இருந்து ஐரோப்பிய, அமேரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற பலர் செய்யும் கேவலமான அலங்கோல வேலைகளால் அந்த அந்த நாட்டு காவல்துறை ஈழத்தமிழர்களை கேவலமானவர்கள் என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றார்கள். அவ்வாறானவர்கள் செய்யும் திருவிளையாடல்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றில் அண்மையில் கனடாவில் நடந்த அலங்கோல வேலை ஒன்றை நாம் தந்துள்ளோம்.
யாழ்ப்பாணம் அச்சுவேலிப்பகுதியை சொந்த இடமாகக் கொண்ட தற்போது 37 வயதான கிருபா ( குறிப்பு பெயர்) என்பவர் 2008ம் ஆண்டு கனடாவுக்கு சென்று குடியேறியுள்ளார். கிருபா அங்கு சென்று 2015ம் ஆண்டு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தற்போது 31 வயதான வக்சலா (குறிப்பு பெயர்) என்பவரை இலங்கைக்கு வந்து திருமணம் செய்த பின்னர் 2017ம் ஆண்டளவில் கனடாவுக்கு வக்சலாவை அழைத்துள்ளார்.
அவர்களுக்கு 2018ம் ஆண்டில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்தப் பிறந்ததினத்தையும் வெகு விமர்சையாகக் கொண்டாடியுள்ளனர் தம்பதிகள். இந் நிலையில் கிருபாவு கனடாவில் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதி ஒன்றில் இருக்கும் பாபா கோவில் ஒன்றில் பக்தையாக இருக்கும் 51 வயதான திருமணம் முடித்த அன்ரி ஒருவருடன் பல காலமாக பாலியல் தொடர்பு இருந்துள்ளதை வக்சலா அறிந்துள்ளார். அத்துடன் அவருக்கு மேலும் சில வயதான அன்ரிகளின் தொடர்பு இருந்துள்ளதையும் வக்சலா தனது நெருங்கிய நட்புக்கள் ஊடாக அறிந்துள்ளார்.
இவ்வாறான போட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு கனடாவில் இதற்கென பல நாரதர்கள் அங்கு உள்ளார்கள். ( இவர்கள் தொடர்பான விபரங்கள் புகைப்படங்களுடன் வெளியிடுவோம்) குறித்த நாரதர்கள் அங்கு வீட்டுப் புறோக்கர்களாகவும் அங்குள்ள பிரபல இந்துக் கோவில்களில் பிரதான செயற்பாட்டாளர்களாகவும், ஊடக ஜாம்பவாங்களாக இருப்பதாக காட்டிக் கொள்பவர்களாகவும் உலா வருகின்றார்கள். இவ்வாறான ஒரு நாரதரால் கணவனின் திருவிளையாடால்கள் பல ஆதாரங்களாக வக்சலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சில மாதங்கள் வக்சலா, கிருபாவுக்கிடையில் முரண்பாடு எழுந்து கிருபாவால் கடுமையாக வக்சலா தாக்கப்பட்டு தற்போது பொலிசாரின் நடவடிக்கை காரணமாக அவர்கள் தற்போது பிரிந்துள்ளார்கள்.
கனடாவில் கணவனை விட்டுப் பிரிந்தவர்களை ”சிங்கிள் மதர்” என அழைப்பார்கள். அவர்களுக்கு அரச உதவித்தொகையும் வழங்கப்படும். இவ்வாறு பிரிந்த சிங்கிள் மதரான வக்சலாவை குறி வைத்து அங்கிள் ஒருவர் செயற்பட்டு தனது வலைக்குள் வீழ்த்திவிட்டார். இவர் வேறு யாருமல்ல… வக்சலாவுக்கு கிருபா தொடர்பான ஆதாரங்களைக் கொடுத்த அதே நபராவார். இவர் கனடாவில் கலியாண வீடுகள், கோயில்திருவிழாக்கள் போன்றவற்றில் புகைப்படங்கள் எடுப்பதுடன் அழகிய தமிழ்ப் பெண்களை கவர் செய்து தனது முகப்புத்தகத்திலும் சில வேளை போட்டுக் கொள்வார். ( இவரது விளையாட்டுக்களும் வெளியிடுவோம்.) . அத்துடன் தமிழ் அன்ரிகள் யார், யாருடன் தற்போது தொடர்பில் இருக்கின்றார்கள் என்பவற்றையும் தனது நட்பு வட்டங்கள் ஊடாக அறிந்து கொள்வதில் கில்லாடி. தமிழ் அன்ரிகளுடன் தொடர்பில் உள்ள இளம் குடும்பஸ்தர்களை எப்படியாவது நட்புக் கொண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தே அவர்களைப் பற்றி விபரங்களை எடுத்து குடும்பத்தைக் குலைப்பதில் பெயர் போனவர். அவ்வாறு குடும்பத்தைக் குலைப்பதுடன் தனித்திருக்கும் குடும்பப் பெண்ணை தன்வசப்படுத்துவதிலும் அவர் கில்லாடி.
சிங்கள் மதராக இருக்கும் வக்சலா தன்னை பொலிசாரிடம் மாட்டி விட்டதுடன் வக்சலா இருக்கும் பக்கமே செல்லக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்த ஆவேசத்திலும் கிருபா தன்னுடன் நெருக்கமாக இருந்த ”அன்ரி” ஒருவருடன் அந்தரங்கமாக இருந்து அந்த வீடியோவை வக்சலாவின் வட்சப்பிற்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து கொதித்த வக்சலா அதையும் பொலிசாருக்கு போட்டுக் கொடுத்து தனது விவாகரத்தை உறுதி செய்ய முயன்றார். இந் நிலையில் வக்சலாவுடன் தொடர்பில் இருந்த அவர்களைப் பிரித்த 48 வயதான ”அங்கிளுடன்” நெருக்கமான நிலையில் காணப்படும் ”செல்பி” வீடியோ ஒன்று கிருபாவின் பேஸ்புக் பக்கத்துக்கு பேக் ஐடி ஒன்றின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கிருபா அதனை இலங்கையில் தனக்கு தெரிந்த ஊடகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு அனுப்பி தனது மனைவி என கூறாது “கனடா தமிழ்க் குடும்பப் பெண்ணின் பாலியல் விளையாட்டு“ என தலையங்கம் போட்டு செய்தி போடுமாறு கூறியுள்ளார், அத்துடன் அந்த அங்கிளின் முகப்புத்தக இணைப்பையும் அனுப்பியுள்ளார். அந்த முகப்புத்த இணைப்புக்குரியவருடன் தொடர்பு கொண்டு குறித்த வீடியோ தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட போது, கிருபா அன்ரியுடன் நடாத்திய பாலியல் விளையாட்டுக்கள் அடங்கிய வீடியோ ஊடகவியலாளருக்கு அனுப்பபட்டதுடன் இது தொடர்பாக கிருபாவிடம் விளக்கம் கேட்கும்படியும் முகப்புத்தகத்துக்குரிய அங்கிள் கூறியதுடன் தானும் வக்சலாவும் நண்பர்களாக வாழ்வதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் குறித்த அங்கிள் தனது முகப்புத்தகத்தில் தனது மனைவியுடன் இணைந்த புகைப்படங்களை பதிவு செய்து வைத்துள்ளதுடன் தனது பிள்ளைகள் தொடர்பான புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அங்கிளை விசாரித்த போது அங்கிள் ”கூலாக” இது தொடர்பா மனைவிக்கும் தெரியும் என கூறியுள்ளார்.
அத்துடன் கிருபாவுடன் தொடர்புள்ள அன்ரிக்கும் கணவர், வயதுக்கு வந்த பிள்ளைகள் இருப்பதாகவும் மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளது. இவற்றையெல்லாம் ஆராய்து அறிந்த குறித்த ஊடகவியலார் வடிவேலுவின் நிலைக்கு மாறியுள்ளார்…………
தொடரும்...