எனக்கு கல்யாணம் கட்டி வையுங்க. நடு ரோட்டில் இளைஞன் போராட்டம்.

தனக்கு ஒரு அரசு வேலையும், திருமணம் செய்து வைக்க வேண்டுமென கோரி, நடு வீதியில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் ஆய்வாளர் சரவணன், போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் காவேரி (33) என்பது தெரியவந்தது.

அவர் நிறைபோதையிலிருந்தார்.

தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், நல்ல அரச வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்த அந்த நபரை, பொலிசார் அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.

பின்னர் போதை வாலிபரை காவல்துறையினர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad