யாழில் மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் நடந்தது.
பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த நபர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.