சென்னை டி.பி சத்திரம் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர்கள் கணேஷ் (30) ரம்யா (29) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரியான லோகநாயகி (27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது
சென்னையில் மனைவிக்கு தெரியாமல் அவரது தங்கையை 2வது திருமணம் செய்துகொண்ட கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை டி.பி சத்திரம் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர்கள் கணேஷ் (30) ரம்யா (29) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரியான லோகநாயகி (27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கணேஷ் பலமுறை தனது மனைவி ரம்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக ரம்யா கடந்த ஜூன் மாதம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 29ம் தேதி ரம்யாவை தொடர்புகொண்ட கணேஷ் உனது தங்கையை திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டேன் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து தனது தங்கையை திருமணம் செய்து வைக்குமாறு தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், தனக்குத் தெரியாமல் தங்கையை இரண்டாவது திருமணமும் செய்துவிட்டதாக ரம்யா மீண்டும் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கணவன் கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது சிறையில் அடைத்தனர்.