படுக்கைக்கு அழைத்து பணம் பறித்த இளம்பெண் கைது.

விபச்சாரத்திற்கு ஆண்களை அழைத்து, அவர்களை நிர்வாணமாக்கி வீடியோ பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபரான இளைஞன், தன்னை தெஹிவளை பொலிஸ் பொறுப்பதிகாரியென கூறி, யுவதியுடன் தங்கியிருந்த ஆண்களை மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.

தெஹிவளையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இரண்டு அறைகளை வாடகைக்கு பெற்று, இந்த ஜோடி நுதனமாக பணம் பறித்துள்ளது.

24 வயதான இளைஞனும், 26 வயதான யுவதியுமே கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு வழிகளிலும் தொலைபேசி இலக்கங்களை பெற்று, வர்த்தகர்கள், தனவந்தர்கள், முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்ட இளைஞன், பல்வேறு பெண்கள் விற்பனைக்கு உள்ளதாக ஆசை வலைவிரித்து, அவர்களை அடுக்குமாடி குடியிருப்பு அறைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆண்கள் அறைக்கு வந்ததும், கதவை பூட்டி விட்டு யுவதி அவர்களை அச்சுறுத்தியுள்ளார். தனது ஆடைகளை களைந்து, அவர்களை வீடியோ எடுத்து, அறைக்குள் நுழைந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக கூச்சலிட போவதாகவும் மிரட்டல் விடுக்கும் உத்தியை கையாண்டு வந்தார்.

அத்துடன், தனது காதலனிற்கு தொலைபேசியில் தகவல் வழங்குவார். தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அறைக்குள் நுழையும் அந்த இளைஞனும், உல்லாசத்திற்கு வந்தவரை உருட்டியெடுப்பார்.

வந்தவரின் நகை, பணம் என்பவற்றை பறிப்பதுடன், அவர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, மேலதிகமாக பணம் பறித்து வந்துள்ளனர்.

ஓமனிலிருந்து வந்திருந்த நபர் ஒருவரும் அந்த கும்பலின் ஆசை வலையில் விழுந்துள்ளார். அவர் அந்த யுவதியின் அறைக்கு சென்றதும், அந்த ஜோடி வழக்கமான உத்தியை பயன்படுத்தி அவரிடமிருந்த 50,000 ரூபா பணம், தங்க நகைகளை கொள்ளையிட்டவர். அவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, அதை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அந்த நபர் தெஹிவளை பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து அந்த ஜோடி கைது செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆடைகளையும், பணத்தையும் இழந்தது தெரிய வந்தது. எனினும், வெட்கம் காரணமாக அவர்கள் யாரும் பொலிசில் முறையிடவில்லையென்பதும் தெரியவந்துள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad