யாழில் கணவனை திருவலையால் அடித்து கொன்ற மனைவி.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

உடனடியாக குடும்பப் பெண் கைது செய்யப்பட்டார்.

திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில் 5 இற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad