யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்த 10பிள்ளைகளின் தந்தை ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சோமசேகரம்-ரவிச்சந்திரன் (வயது-48) என்ற 10பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் “குடும்பத்தலைவரின் சகோதரன் வீடு அருகில் உள்ளது. அவர் நேற்றுமுன்தினம் மதுபானசாலை-திறந்தமையால் மதுபோதையில் மாலைவீட்டிற்கு சென்று தனது சகோதரனை-தாக்கியுள்ளார். சகோதரனைத் தாக்கியகவலையில் தனது வீட்டு அடுப்படிக்குச் சென்ற அவர் தனக்கு தானே பெற்றோல் ஊற்றியுள்ளார்.
அதன்போது அவரது மனைவி அடுப்படியில் சமைத்துக் கொண்டிந்துள்ளார். அடுப்பில் பெற்றோல் தெறித்து மனைவி மீது தீ பற்றி கணவன் மீதும் பற்றியுள்ளது. இருவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தலைர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மனைவிதொட்ர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் அடிகாயத்துக்குள்ளான சகோதரனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று-வருகிறார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணைஅதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.