யாழில் ஏமாற்றிய காதலியை வித்தியாசமாக பலி வாங்கிய இளைஞன். தெறித்து ஓடிய வெளிநாட்டு மாப்பிள்ளை.

யாழில் காதலித்து ஏமாற்றிய பெண்ணை நூதனமாக பழிவாங்கிய இளைஞன் பற்றிய தகவல்
வெளியாகியுள்ளது.
சுமார் இரண்டரை வாரங்களின் முன்னர் கொக்குவிலில் நடந்த இந்த சம்பவத்தினால்,
பிரித்தானியாவிலிருந்து திருமணத்திற்கு வந்த இளைஞர், இறுதி நேரத்தில் திருமணத்திற்கு
மறுப்பு தெரிவித்து விட்டார்.

யாழ் நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரியும்- யாழ் புறநகர் பகுதியொன்றை சேர்ந்த
இளைஞன் ஒருவர், கொக்குவில் பகுதியை சேர்ந்த யுவதியொருவரை சில வருடங்களாக காதலித்து
வந்துள்ளார். அவர் அழகுகலைஞராக பணிபுரிந்து வருகிறார்.

பேசிப்பழகி, ஊர்சுற்றி இருவரும் காதலித்த காலத்தில், சில முறை வெளியூர்களிற்கும்
சென்று தங்கியுள்ளனர். காதலி ஆசைப்பட்டார் என கடந்த வருடம் கொழும்பில் நட்சத்திர
விடுதியொன்றிலும் தங்கியுள்ளனர். காதலித்த காலத்தில் தங்க நகை வாங்கியது உள்ளிட்ட
பணச்செலவையும் காதலன் செய்துள்ளார்.
எனினும், கடந்த 6 மாதங்களின் முன்னர் காதலனுடனான தொடர்பை அந்த யுவதி திடீரென
நிறுத்திக் கொண்டார்.

காதலியை தொடர்பு கொள்ள பகீரத பிரயத்தனப்பட்டும் முடியாமல் போன நிலையில், அப்பொழுது
கொக்குவிலில் உள்ள காதலியின் வீட்டிற்கு அந்த இளைஞன் சென்றுள்ளார். காதலி வீட்டில் இல்லையென
கூறி வீட்டிலிருந்தவர்கள் அவரை அனுப்பியதுடன், வீடு தேடி வந்தமைக்காக காதலியின் சகோதரன்
மற்றும் அவர்களது நண்பர்களால் காதலன் தாக்கப்பட்டுமிருந்தார்.

வெளிநாட்டிலுள்ள மணமகன் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதையடுத்தே தன்னுடனான
தொடர்பை காதலி தவிர்த்துக் கொண்டார் என்ற தகவலை பின்னர் அந்த இளைஞன் அறிந்து கொண்டுள்ளார்.

அந்த யுவதிக்கு, பிரித்தானியாவிலுள்ள மாப்பிள்ளையொருவருடன் திருமணம்
நிச்சயிக்கப்பட்டிருந்தது.

யுவதியை திருமணம் செய்வதற்காக மணமகன் இலங்கைக்கு வந்து, தனது சொந்த ஊரான
சாவகச்சேரியில் தங்கியிருக்கிறார். கடந்த மாத நடுப்பகுதியில் இரு தரப்பிலும்
சம்மந்தக்கலப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் காதலியின் நண்பர்கள் மூலமாக, மணமகனின் விபரத்தை தெரிந்து கொண்ட முன்னாள்
காதலன், பிரித்தானியா மாப்பிள்ளையின் முகநூல் வழியாக அவரை தொடர்பு கொண்டு, அதிர்ச்சி
வைத்தியம் செய்துள்ளார்.
பிரித்தானியா இளைஞன் திருமணம் செய்யவுள்ள பெண்ணாண தனது முன்னாள் காதலிக்கு பெருமளவு
பணம் செலவிட்டுள்ளேன், அந்த பணத்தை தனக்கு தந்து விட்டு, அவரை திருமணம் செய்யுங்கள் என
அவருக்காக செலவிட்ட பணத்தின் சிட்டைகள் சிலவற்றையும், இருவரும் நெருக்கமாக எடுத்த
புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். கொழும்பு நட்சத்திர விடுதியில் தங்கி கட்டணம்
செலுத்திய சிட்டை, தங்க நகை வாங்கிய சிட்டைகள் உள்ளிட்ட சிலவற்றையே இளைஞன் அனுப்பி
வைத்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்ததற்கு சில நாட்களின் பின்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் காதலனிற்கு பில் முடித்து, யுவதியை திருமணம் செய்ய விரும்பாததால், அந்த
திருமணத்தையே அவர் வேண்டாமென நிறுத்தி விட்டார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad