யாழ்.வடமராட்சி வல்லை வெளி மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் காரில் வந்த வழிப்பறி கும்பல் நேற்று மாலை அடுத்தடுத்து 3 இடங்களில் வழிப்பறி கொள்ளை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.
வெள்ளை நிற காரில் வந்த குறித்த கொள்ளை கும்பல் வீதியால் வந்தவரை வழிமறித்து தடுப்பூசி அட்டையினை காட்டுமாறு கேட்டுள்ளது. இதற்கு அந்த நபர் தடுமாறவே அவரிடமிருந்த பண பையை பறித்துச் சென்றுள்ளது.
அதே கும்பல் அடுத்ததாக வல்வெட்டித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிவந்த நபரை வழிமறித்து கல் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை கேட்டு அச்சுறுத்தி பணத்தை பறித்துச் சென்றுள்ளது.
இவ்வாறு ஒரு மணித்தியாலத்தில் 3 இடங்களில் 3 நபர்களிடம் குறித்த கும்பல் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மேலும் வழிப்பறி கொள்ளையர்கள் பயன்படுத்திய வெள்ளை நிற காருக்குள் அங்கவீனர்கள் பயன்படுத்தும் கைத்தடி ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் காரினுள் அங்கவீனமுற்றவர்கள் பயன்படுத்தும் கைத்தடி ஒன்றும் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.