வவுனியா, குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (01) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தேவை நிமிர்த்தம் வீட்டில் இருந்து காலை வெளியேறிச் சென்றிருந்தனர். மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டில் இருந்த அலுமாரிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பன திருடப்பட்டிருந்தன.
இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 4 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் எனபனவற்றை திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முமறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.