அமிக்கல்லை நடு மண்டையில் போட்டு மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள காந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஷைலா (30). இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. குடிப்பழகத்திற்கு அடிமையான முருகன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம்.  இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருகே குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள காந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஷைலா (30). இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. குடிப்பழகத்திற்கு அடிமையான முருகன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம்.  இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று மாலை முருகன் மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியே சென்ற முருகன் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, ஷைலா அப்படி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தால் எப்படி? ஊரில்தான் குடித்துவிட்டு வருகிறாய், மாமியார் வீட்டிற்கு வந்தும் குடிக்க வேண்டுமா? இதேபோல் குடித்துவிட்டு வந்தால் உன்னோடு வாழமாட்டேன் எனக்கூறி மிரட்டினாராம். வாக்குவாதம் நீண்ட நேரம் நீடித்த நிலையில் ஷைலா தூங்க சென்றுவிட்டாராம். 

ஆனால், மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த முருகன். வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்த ஷைலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, முருகன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது ஷைலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷைலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad