உடுப்பு கடையில் ஆடை மாற்றுவதை கேமரா வைத்து பார்த்த காவாலி கைது. பெண்கள் அவதானத்துடன் செயற்படுங்கள்

ஆடை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் பெண்கள் உடை மாற்றும் இடத்தில் கெமராவை பொருத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் முக்கிய நகரம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண்கள் ஆடைகளை கொள்வனவு செய்ய கடைகளுக்கு சென்று உடைகளை மாற்றும் போது, அந்த இடம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கியமான நகரங்களில் உள்ள பெரிய ஆடை விற்பனை நிலையங்கள் உட்பட வர்த்தக நிலையங்களில் பெண்கள் உடை மாற்றும் இடங்களில் கெமராக்களை பொருத்தி படங்களை எடுக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதுடன் இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன. இதனால் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad