கவுத்தமாலா நாட்டின் சண்டா ஹடரினா ஐஸ்டஹூஹன் மற்றும் நாலுலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருதரப்பு மக்களிடையே கடந்த நூறு வருடங்களை தாண்டி நில பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாலுலம் என்னும் பகுதியில் இருக்கும் சின்கியூக்ஸ் என்ற கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து, சுமார் 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த மோதல் பல கிராமங்களையும் உள்ளடக்கியதாக, அதிக வருடங்களாக நீண்டு வருவதால் கலவரமாக வெடிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.