11 நாடுகளுக்கான தடையை நீக்கிய பிரித்தானியா!

ஒமிக்ரோன் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன.

அதேவேளை வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வெளிநாட்டு பயணங்களுக்காக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் அதேவேளை சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்குவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad