18 வயது யுவதியை அம்மாவாக்கியது யார்? விசாரணையில் அம்பலம்!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில். 18 வயதான யுவதியொருவர் குழந்தை பிரசவித்து, அதை குழி தோண்டி புதைக்க முற்பட்ட சம்பவத்தில் மேலுமொருவர் கைதாகியுள்ளார். 18 வயதான யுவதியை கர்ப்பவதியாக்கிய, 23 வயதான திருமணமான இளைஞன் ஒருவரே கைதாகினார். கடந்த 23ஆம் திகதி அதிகாலை, மட்டுவில் பகுதியில் குழந்தை பிரசவித்த 18 வதான யுவதி, தனது தாயாருடன் இணைந்து குழந்தையை குழி தோண்டி புதைக்க முற்பட்ட போது சிக்கினார்.

அயல்வீட்டுக்காரர் அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அஙகு சிசு புதைக்க தாயாரான நிலைமையில் வைக்கப்பட்டிருந்தது. தாயையும், குழந்தையையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிதத பொலிசார், யுவதியின் தாயாரை கைது செய்தனர். யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கர்க்கத்திற்கு காரணனமானவர் அடையாளம காணப்பட்டுள்ளார்.

யுவதியின் உறவினரான 23 வதான இளைஞனே கைதாகியுள்ளார்.இவர் ஏற்கனவே திருமாணவர். இதுதவிர, குழந்தையை பிரசவி;த யுவதிக்கு மேற்கொள்ளப்பட் சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad