இலங்கை அரசு பெரும் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 2 தினங்களுக்கு போதுமான அளவு நிதியே மத்திய வங்கியிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் தாமதித்து வருகிறது. வேறு நாடுகள் கடன் கொடுத்து உதவ தயாராக இல்லை. காரணம் இலங்கையால் அதனை மீள செலுத்த முடியாது. இன் நிலையில் அப்படியே இலங்கை அரசை கை விட்டு விட்டு, ராஜபக்ஷர்கள் ஓடி விடுவார்கள் என்று சில சிங்கள அரசியல் வாதிகள் கூறி வருகிறார்கள். காரணம் என்னவென்றால், இனி எந்த அரசு வந்தாலும் இலங்கையை கட்டி எழுப்புவது என்பது முடியாத காரியம் என்கிறார்கள். அந்த அளவு கடன் சுமை உள்ளது. இதனால்..
இலங்கை அரசின் நிலை கேள்விக் குறியாக மாறியுள்ளது. சூடான், தன்சானியா போன்று இலங்கை அரசும் டிபாஃல்ட் அரசாக அறிவிக்கப்படலாம்.