தென்கொரிய நாட்டில் இருந்து இந்தியா வந்து, ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்கள் 2 தென் கொரிய நாட்டவர்கள். இவர்கள் கோடிக் கணக்கில் Gஸ்T வரி ஏய்ப்புச் செய்த நினையில். இதனை இந்திய வருமான வரி திணைக்களம் கண்டு பிடித்து. இவர்களை பொலிஸ் காவலில் விட்டது. ஒரு வழியாக அதனை வீட்டுக் கவலுக்கு மாற்றிய அந்த 2 தென் கொரிய நபர்களும், வீட்டுக் காவலில் இருந்த வேளையே போலியான வேறு பாஸ்போட்டை அப்பிளை செய்து உள்ளார்கள். பின்னர் ஒரு வழியாக பொலிஸ் கண்ணில் மண்ணைத் தூவி வீட்டுக் காவலில் இருந்து தப்பி. போலி பாஸ்போட் மூலம் அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி விட்டார்கள்.
ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 2 தென் கொரியர்கள் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க செங்கல்பட்டு எஸ்பிக்கும், ஆரம்பகட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கும் நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஆர் ஹேமலதா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.