3வது ஊசி யார் வேண்டும் என்றாலும் போடலாம் என்ற அறிவித்தலை பிரித்தானியா கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வெளியிட்டதில் இருந்து, மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசி நிலையங்களை நோக்கிப் படை எடுத்து வருகிறார்கள். காலை 7 மணிக்கு திற்க்கும் இந்த நிலையங்களுக்கு காலை 5 மணியில் இருந்தே, மக்கள் சென்று காத்திருக்கிறார்கள். ஆனால் தடுப்பூசி போட ஆட்கள் பற்றாக் குறையால் பலர் திரும்பி வருகிறார்கள். வைத்தியசாலைகளுக்கு நேற்று(14) புது அறிவித்தல் ஒன்று சென்றுள்ளது. குணம் அடைந்த நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பி, மற்றும் வயதானவர்களாயின் அவர்களை முதியோர் இல்லத்திற்கு உடனே அனுப்புக என்பது தான்… ஏன் எனில் இன்னும் சில தினங்களில் ,
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் வேறு நோய்களுக்காக வந்த நோயாளிகளும் பாதிப்படைய கூடும் என்ற நிலை காணப்படுகிறது.