லண்டன் கிளப்பம்(Clapham) என்னும் இடத்தில் உள்ள “””வைட் றோஸ் சூப்பர்””” மார்கெட்டில், ஜோன் மற்றும் மார்க் என்ற 2 நபர்கள் லாட்ரி சீட்டை வாங்கியுள்ளார்கள். அதனை உரஞ்சிப் பார்த்தவேளை 4 மில்லியன் பவுண்டுகள் அதிஷ்டம் அடித்தது. உடனே பேஸ் புக்கில் படத்தை போட்டு விட்டு. நண்பர்களிடம் கொஞ்சக் காசை கடன் வாங்கி, கொண்டாடியுள்ளார்கள் இந்த இருவர். சில நாட்கள் கழித்து, தாம் வாங்கிய லாட்ரி சீட்டை, கமலொட் கம்பெனிக்கு அனுப்பி, காசைப் பெற்றுக் கொள்ள முனைந்தார்கள் இந்த மோடர்கள். லாட்ரி சீட்டு, உண்மையானது தான். எந்த வங்கிக்கு காசை அனுப்புவது என்று, கமலொடில் வேலை செய்யும் நபர் கேட்டவேளை. தற்செயலாக உண்மையைச் சொல்லிவிட்டார், ஜோன் என்னும் நபர். என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை என்று. அப்படி என்றால் வங்கி அட்டை ஊடாக இந்த லாட்ரி சீட்டை வாங்கியதாக நீங்கள் முன்னர் கூறினீர்களே என்று, கமலொட் ஆள் கேட்க்கவே…. சந்தேகம் பற்றிக் கொண்டது.
எனது நண்பரின் கடன் அட்டையை நான் பாவித்தேன். அவர் எனக்கு பணம் தரவேண்டி இருந்தது. அதனால் அவர் அனுமதியோடு கடன் அட்டையை பாவித்தேன் என்று கூறினார் ஜோன். இதனை ஏற்க்க மறுத்த கமலொட் நிர்வாகம், உடனே விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் ஜோன் பாவித்தது நண்பரது கடன் அட்டை இல்லை என்பதும். அது களவாடப்பட்ட கடன் அட்டை என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து 4 மில்லியன் பவுண்டுகளும் காற்றில் பறந்தது. ஜோன் மற்றும் மார்க் ஆகிய 2 நண்பர்களும், வீடு புகுந்து களவாடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். கமலொட் நிறுவனம் தாம் சேகரித்த விடையங்களை பொலிசாரிடம் கொடுத்ததால். பொலிசார் இவர்கள் இருவரையும் கைது செய்து உள்ளே அடைத்துள்ளார்கள். இதேவேளை …
தற்போது சிறையில் உள்ள ஜோன் மற்றும் மார்க் ஆகியோர், கமலொட் நிறுவனம் தங்களை ஏமாற்றி தர வேண்டிய காசை தராமல் அபேஸ் செய்து விட்டது என்று கூறியுள்ளார்கள். வங்கிக் கணக்கு கூட இல்லாத, இந்த வெள்ளை இன ஆட்களை என்னவென்று சொல்வது ?