“முதியவரின் வித்தியாசமான ஐடியா!”…… 5 நாட்களில் குவிந்த குறுந்தகவல்கள்…. அப்படி என்ன செய்தார்….?

அமெரிக்காவில் வசிக்கும் ஜிம் பேஸ் என்ற 66 வயது முதியவர், உலகிலேயே அதிக சுதந்திரம் உள்ள இடத்திற்கு செல்ல விரும்பினார். எனவே, இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் மாகாணத்தில் குடிபெயர்ந்திருக்கிறார். இவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருக்கிறது. இவருக்கு, ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், இவர் கடந்த ஜூன் மாதத்தில் லோன் ஸ்டார் ஸ்டேட்-ற்கு தன் தொழிலை மாற்றியிருக்கிறார். அப்போது, அதிகமாக தனிமையை உணர்ந்த அவர், தன் மீதி நாட்களை ஒரு பெண்ணுடன் கழிக்க தீர்மானித்தார். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியாக கொண்டாடுவதற்கும் அவருக்கு விருப்பமில்லை.

எனவே, டெக்ஸாஸ் மாகாணத்தின் நெடுஞ்சாலையில், மிகப்பெரிய விளம்பரப் பலகை ஒன்றை வைத்துவிட்டார். அதில் 50 வயதிலிருந்து 55 வயதுட்பட்ட, நன்கு பேசக்கூடிய, அன்பான பெண் தேவை என்று குறிப்பிட்டு, தன் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு, அவருக்கு தொடர்ந்து, பல பெண்களிடமிருந்து குரல் வழியாக குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad