பிரித்தானியாவில் உள்ள அதி வேக நெடுஞ்சாலைகள் சிலவற்றில், புது வகையான கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அவை வேகக் கட்டுப்பாடு கமரா என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. வாகனத்தை ஓட்டும் போது, ஓட்டுனர்கள் மோபைல் போனை பாவிக்கிறார்களா என்று கண்டு பிடிக்கும் கமரா தான் இவை. 60 நாட்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட கமரா ஒன்றில், சுமார் 15,000 ஓட்டுனர்கள் இது போல பிடிபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் வானத்தை ஓட்டிக் கொண்டு கையில் மோபைல் போனை பாவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஒரு கார் விபத்தில் சிக்கிய காட்சியும் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் DVLA இந்த ஆவணங்களை பொலிசாரிடம் கொடுக்கும் என்று, கூறப்படுகிறது.