சுவிஸ்சில் கணவனுக்கு தெரியாது சீட்டுப் பிடித்த யாழ்ப்பாண குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!! 60 ஆயிரம் பிராங்குடன் சீட்டு முதலாளி ஓட்டம்!!

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு குறிப்பட்ட தொகைப் பணம் கொடுத்ததாகவும் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த குடும்பப் பெண் சீட்டுப் பிடித்து வந்ததாகவும் சீட்டு முதலாளியான இன்னொரு தமிழர் குறித்த பெண்ணின் 60 ஆயிரம் பிராங் பணம் மற்றும் வேறு சிலரின் பணத்துடன் ஜேர்மனிக்கு தப்பிவிட்டதாகவும் தெரியவருகின்றது. இருப்பினும் சுவிஸ்லாந்தில் சீட்டுப்பிடிப்பது சட்டவிரோத செயல் என்பதால் இதற்கு வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதுடன் சீட்டுப்பிடித்தால் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜேர்மனிக்கு தப்பி ஓடிய அந்த தமிழரின் புகைப்படங்கள் மற்றும் அனைத்து விபரங்களும் விரைவில் வெளியாகும்.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad