£ 69 பவுண்டு PCR சான்றிதழை போலியாக அச்சடித்த லண்டன் தமிழர் சிக்கினார்- LHRல் அதிரடி !

அட உங்க பணத்தாசைக்கு அளவே இல்லையா ? வெறும் £69 பவுண்டுகளை கொடுத்தால், லண்டனில் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய முடியும். அவர்கள் தரும் சான்றிதழை கொண்டு விமானத்தில் பறக்க முடியும். ஆனால் இந்த 69 பவுண்டுகளை மிச்சம் பிடிக்க, லண்டன் தமிழர் ஒருவர் போட்ட திட்டம், அவருக்கு £1,000 பவுண்டு அபராதம் விதிக்க ஏதுவாகி விட்டது. குறித்த நபரது பெயர் விபரங்களை நாம் இங்கே வெளிடவில்லை. இன் நபர் கடந்த 7ம் திகதி வேறு ஒரு நாட்டில் இருந்து, மீண்டும் லண்டன் வந்துள்ளார். அவர் லண்டன் வரும் வேளை, பி.சி.ஆர் பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அது போக passenger locator form என்ற படிவத்தையும் அவர் நிரப்பி எடுத்து வரவேண்டும்.  இதனை போலியாக செய்யப் போய் இறுதியில், பி.சி.ஆர் சான்றிதழும் போலி என்பதனை. இமிகிரேஷன் கண்டு பிடித்து விட்டார்கள். இவர் லண்டனுக்கு வெளியே கடையும் வைத்திருக்கிறாராம்…

passenger locator form படிவத்தில், நான் பிரிட்டன் வந்து 2வது நாளில் வீட்டில் வைத்து அன்ரி ஜென் பரிசோதனை செய்து பார்பேன் என்ற அத்தாட்சியை இணைக்க வேண்டும். அதில் நாம் 35 பவுண்டுகள் செலவு செய்து அந்த KIT ஓடர் செய்தும் இருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த படிவத்தில் பொலியான ஓடர் நம்பரை போட்டுள்ளார்.  Source: A Bolton (Blackpool) travel agent is being investigated for issuing fake COVID-19 travel certificates following a man arrested at LHR airport,  The Bolton-based travel agent was selling certificates of a negative PCR test result, but issued fraudulent documents claiming to be from a legitimate test clinics.

இதில் பிழை இருப்பதை கண்டு பிடித்த இமிகிரேஷன் அதிகாரி, சந்தேகம் கொண்டு பி.சி.ஆர் சான்றிதழை பரிசோதனை செய்த வேளை. அது வேறு ஒருவரது சான்றிதழ் ஆனால் பெயர் மட்டும் மாற்றப்பட்டு மீண்டும் பிரின் செய்யப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளார். இதனால் குறித்த தமிழருக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டர்மினல் 2ல் இடம்பெற்றுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad