பிளான் B யை அறிவித்தார் … வீட்டில் இருந்தபடி வேலை: கடுமையான திட்டங்களை சற்று முன் அறிவித்தார் பொறிஸ் ஜோன்சன்..

HERE WE GO AGAIN Boris Johnson triggers Covid Plan B with work from home, vaccine passports & tougher face mask rules within DAYS: சற்று முன்னர்(மாலை 6 மணிக்கு) தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய பிரித்தானிய பிரதமர் பல புது கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளார். அவர் பிளான் B என்ற புது திட்டத்தை அறிவித்துள்ளமை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு நாளைக்கு 1,000 பேர் வரை கடுமையான நிலைக்குச் சென்று,  மருத்துவ மனைகளில் சேரக் கூடும் என்றும். இதனால் பிரித்தானியாவில் உள்ள அனைத்து, வைத்தியசாலைகளும் நிரம்பக் கூடும் எனவும், விஞ்ஞானிகள் மிகக் கடுமையாக, எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனால் பொறிஸ் ஜோன்சன் மிக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு செய்துள்ளார். அதன் காரணத்தால் தான் , அதற்கு பிளான் B என்று பெயர் சூட்டி உள்ளார்.. அதில் ஒன்று..

வீட்டில் இருந்து வேலை செய்வது. வரும் வெள்ளிக் கிழமை தொடக்கம் அனைத்து இடங்களிலும் முக கவசம் அணியவேண்டும். அது கட்டடங்களுக்கு உள்ளே அல்லது வெளியேயாக இருந்தாலும் சரி. வரும் திங்கள் முதல் வீட்டில் இருந்தபடி தான் வேலை செய்ய வேண்டும்… என்ற திட்டமும் அறிவிக்கப்பட உள்ளது. அத்திய அவசிய வேலையாட்கள் மட்டுமே வெளியே வேலைக்கு செல்ல முடியும் என்ற முடிவை பொறிஸ் எட்டிவிட்டார். ஆட்கள் கூடும் இடத்தில் 2 தடுப்பூசிகள் போட்ட நபர்கள் மட்டுமே செல்ல முடியும். என்ற கட்டுப்பாடு வரும் புதன் கிழமை தொடக்கம் வர உள்ளது. எனவே தமிழர்களே உங்கள் நிகழ்ச்சியில் 500 பேருக்கு மேல் ஆட்கள் கலந்து கொண்டால்,  நீங்கள் 2 தடுப்பூசிகள் போட்ட ஆதாரத்தை கேட்க்க வேண்டும்.

மேலும் தற்சமயம் 568 பேருக்கு தான் ஒமிக்ரோன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது 10,000 பேருக்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள்.

Giving a Commons statement at the same time Health Secretary Sajid Javid told MPs there are 568 confirmed cases variant – but the estimated current number is “probably closer to 10,000”.

To stem the spread new rules include:

Compulsory face masks in all indoor settings from FRIDAY
Working from home except key workers from MONDAY
Vaccine passports for crowded venues from NEXT WEDNESDAY

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad