உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் வசிக்கும் ஒரு 28 வயதான பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு ஒரு உள்ளூர் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .இதனால் அந்த பெண் அந்த வாலிபர் மீது புகார் கூற அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் .அப்போது இந்த வழக்கை விசாரிக்கும் ஒரு கான்ஸ்டபிள் அந்த பெண்ணின் மீது ஆசைப்பட்டார் .
அதனால் அந்த கான்ஸ்டபிள் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து இந்த வழக்கை விசாரிக்கும் சாக்கில் அடிக்கடி அந்த பெண்ணிடம் பேசி வந்ததால் ,இருவருக்கும் கள்ள தொடர்பு உண்டானது .பின்னர் அந்த கான்ஸ்டபிள் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு ஆண்டுகளாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் .பின்னர் அந்த பெண் சமீபத்தில் அந்த கான்ஸ்டபிளிடம் திருமணம் பற்றி கேட்டதற்கு அவர் அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் . .அதன் பிறகு அந்த பெண் அந்த கான்ஸ்டபிள் பற்றி விசாரித்த போது ,அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஐந்து வயதில் ஒரு குழந்தை இருப்பதை கண்டுபிடித்து அதிர்சியடைந்தார் .அதனால் அவர் அந்த கான்ஸ்டபிள் மீது அங்குள்ள பொலிஸில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த கான்ஸ்டபிள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்