ஆப்கானிஸ்தானின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போதிலிருந்தே ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலிபான்களை குறிவைத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மலாலா உயிர்தப்பினார். மேலும் தலையில் பலத்த காயம் அடைந்த இங்கிலாந்து சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார். இதையடுத்து 17-வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தை அவசியம் குறித்து ஐ.நா வில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பணியாற்றி வருகிறார். இதற்காக மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மலாலா தன்னுடைய 17-வது வயதில் இந்த விருதைப் பெற்றார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் அதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணியை சந்தித்து பேசிய மலாலா ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் அங்கு சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும், பெண்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு போன்ற உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இருந்தாலும், இதனை தலிபான்களின் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசிய மலாலா, ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற பெண் குழந்தைகள் அமைதியான முறையில் வாழவும், கல்வி கற்பதற்கும், விளையாடி மகிழ்வதற்கும் அடிப்படை உரிமை உண்டு எனவும், அதனை உறுதி செய்ய வேண்டியது சர்வதேச அரசுகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்க அரசு ஐநாசபையுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.