அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான அட்டன் ஓயாவிலிருந்து இன்று (7) பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் அட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 50ற்கும் 60ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
–க.கிஷாந்தன்-
The post ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண்ணின் சடலம்: நடந்தது என்ன? appeared first on Pagetamil.
from Pagetamil https://ift.tt/3Dxh3Am
via IFTTT