ரஷ்ய நாட்டை எதிர்த்து, செச்சென் போராளிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக Tornike Khangoshvili என்ற நபரை ஜெர்மன் நாட்டில் இருக்கும் பெர்லின் நகரத்தின் ஒரு பூங்காவில் வைத்து கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்ய உளவாளிகள் கொலை செய்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெர்லின் நீதிமன்றம் ரஷ்ய உளவாளிகள் தான் கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதி செய்திருக்கிறது.
இது ஒரு நாட்டினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத செயல் என்று நீதிபதி கூறியிருக்கிறார். அதன்பின்பு, Vadim Krasikov என்ற ரஷ்ய உளவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட ஜெர்மன், ரஷ்ய தூதரை அழைத்து விளக்கம் கேட்டது.
மேலும், ஜெர்மன் நாட்டிற்கான ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறது. மேலும், நீதிமன்றம் Vadim Krasikov என்ற நபருக்கு ரஷ்ய அரசு, போலியான ஆவணங்களை கொடுத்ததாகவும், அதனை வைத்து தான், அந்த நபர் ஜெர்மன் நாட்டிற்கு பயணம் செய்திருக்கிறார் என்றும் கண்டறிந்திருக்கிறது.