கணவரின் தலையுடன் வந்த பெண்ணால் பரபரப்பு…. மொசாம்பிக்கில் கொடூர சம்பவம்….!!

மொசாம்பிக் நாட்டில் இருக்கும் Cabo Delgado என்ற மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அன்று ஒரு பெண், தன் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளார். மேலும், துண்டிக்கப்பட்ட தலையை கொண்டு சென்று புகார் கொடுக்குமாறு ஐ.எஸ் பயங்கரவாத கும்பல் தன்னை வற்புறுத்தியதாகவும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தன் கணவரின் உடலை வயல்வெளியில் கண்டதாகவும் அவர் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

Cabo Delgado என்ற மாகாணத்தில் கடந்த 2017 ஆம் வருடத்திலிருந்து ஐஎஸ் பயங்கரவாத கும்பல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை சுமார் 3340 நபர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் கடந்த மார்ச் மாதத்தில் ஐ.எஸ் தீவிரவாதி கும்பல் பால்மா நகரத்தில், பயங்கர தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad