இன்றுவரை சில தமிழர்கள், சுமந்திரனை ஆதரித்து வருகிறார்கள். ஆனால் அவர் செய்துள்ள படு கேவலமான சில விடையங்களை. இதுவரை எவரும் அறியாத விடையங்களை இங்கே நாம் தர இருக்கிறோம். பாருங்கள் தமிழர்களே… பொதுவாக நாம் ஒருவரிடம் கடன் கேட்டுச் சென்றால், அவர் தன்னிடம் காசு இல்லை என்று சொன்னால். உடனே நாம் என்ன செய்வோம் ? வேறு ஒரு நபரிடம் காசு கேட்டுச் செல்வோம். ஆனால் அதே நபர், காசு இல்லை என்று சொல்லாமல், தருகிறேன் … தருகிறேன் என்று கூறி எம்மை ஏமாற்றி வந்தால். நாம் சில காலம் அவர் பேச்சை நம்பி இருப்போம் அல்லவா ? அது தான் சுமந்திரன் செய்யும் சுத்து மாத்து வேலை. இதனை நன்கு நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். திருகோண மலையில் 2008ம் ஆண்டு, 11 அப்பாவி பொது மக்களை சுட்டுக் கொன்றது சிங்கள கடல் படை. இதனை செய்தது சந்தன் ஹெட்டி ஆராட்சி என்பது அமெரிக்க அரசுக்கு நன்றாக தெரியும்… அவர் மீது..
வழக்கு தொடரப்பட்டது. அன்றைய தினம் தமிழர் தரப்பில் இருந்து பல வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக வாதாட முற்பட்டவேளை. இந்த சுத்து மாத்து சுமந்திரன் இந்த வழக்கை தான் எடுத்து நடத்துவதாக கூறி ஆஜர் ஆனார். ஆனால் வழக்கில் சரியான ஆதாரங்கள் எதனையும் , சுமந்திரன் தரப்பு முன் வைக்கவில்லை. இது வேண்டும் என்றே செய்தார்கள். இதனால் சந்தன் ஹெட்டி ஆராட்சி விடுதலையானார். ஆனால் இன்றுவரை அமெரிக்க அரசு, சந்தன் ஹெட்டி ஆராட்சி தான் குற்றவாளி என்று கூறி வருகிறது. ஆனால் வழக்கை நடத்திய சுமந்திரன் சிங்கள எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு சந்தன் ஹெட்டி ஆராட்சியை தப்பிக்க வைத்துள்ளார். இது போலவே சுமந்திரன், ஜெனீவாவிலும் சென்று தமிழர்களுக்காக பேசுவது போல நடித்து. இறுதியில் மண்ணை அள்ளிப் போட்டார். லண்டனிலும் அவர் வந்து சந்தித்த நபர்கள் யார் ? அவர்கள் அனைவருமே தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள். சிங்களத்தின் அடி வருடிகள். அதனை நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இப்படி பல மனித உரிமை வழக்குகளை தன் கையில் எடுத்து இறுதியில் அதனை நீர்த்துப் போக வைத்துள்ளார் சுமந்திரன். எனவே தமிழர்களே இனியாவது விழித்திக் கொள்ளவேண்டும்.