“ஆஸ்கர் போட்டி”…. இடம் பெற்ற இந்திய ஆவண படம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஆவண பட போட்டியில் ரைட்டிங் வித்ஃபயர் எனும் இந்திய படம் இடம் பெற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய படமான ரைட்டிங் வித்ஃபயர் ஆவண படம் சர்வதேச ஆவண படங்களுக்கான டாப் 15 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தலித் பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் ஒரே பத்திரிக்கையான கபர் ஹரியாவின் எழுச்சியை ரைடிங் வித்ஃபயர் ஆவண படம் விவரிக்கிறது.

இந்த ஆவண படத்தை தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இயக்கி உள்ளனர். சிறந்த வெளிநாட்டு படங்களின் போட்டி பிரிவில் 15 படங்கள் சிறந்த படத்துக்கான போட்டியில் இருக்கிறது. இப்பிரிவில் 92 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் தகுதி பெற்றது. ஜப்பானிய படமான டிரைவ் மை கார், டென்மார்க்கிலிருந்து ஃப்ளீ, ஈரானைச் சேர்ந்த அஸ்கர் ஃபர்ஹாதியின் எ ஹிரோ மற்றும் இத்தாலியை சேர்ந்த தி ஹேண்ட் ஆஃப் காட் போன்ற படங்கள் இப்பிரிவில் முன்னணியில் உள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad