கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாயமானதாக தேடப்பட்டுவந்த பள்ளி ஆசிரியர் தொடர்பில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக Naomi Onotera என்பவர் மாயமான விவகாரத்தில் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து படுகொலை உள்ளிட்ட இரு பிரிவுகளில் குறித்த ஆசிரியரின் கணவர் மீது வழக்கு பதிந்து, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாயமானதாக கூறப்பட்ட ஆசிரியர் கொல்லப்பட்டு, குடியிருப்பிலேயே புதைக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.
கைதான நபரிடம் விசாரணை முன்னெடுத்த பின்னரே, இந்த வழக்கின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Naomi Onotera மாயமானதாக அவரது தாயார் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் திகதி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் விசாரணை முன்னெடுத்து வந்துள்ளனர்.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் அவர்களது குடியிருப்பை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், இரண்டு வார காலம் தீவிர விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையிலேயே மாயமான ஆசிரியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.