“சிறைச்சாலைக்கு தீ வைத்த கைதிகள்”…. என்ன காரணம்?…. தாய்லாந்தில் பரபரப்பு….!!!!

தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் கொரோனா பரவிவிடுமோ? என்ற அச்சத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சுமார் நூறு கைதிகள் ஒன்றிணைந்து சிறைச்சாலைக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் கலவரத்தை ஒடுக்குவதற்காக ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகம் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளில் 31 பேரை அதிக பாதுகாப்புடன் கூடிய வேறு சிறைச்சாலைக்கு மாற்றம் செய்துள்ளது. இந்த சம்பவத்தால் சிறைச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad