பிரிட்டன் நாட்டில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டில் கிறிஸ்துமஸ் விருந்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியானதால், நாட்டு மக்கள், பிரதமர் மீது அதிருப்தியடைந்துள்ளனர். நாட்டு மக்களுக்கு மட்டும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து விட்டு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா? என்று மக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
அந்த விருந்தில் பிரதமர் பங்கேற்றது உறுதிசெய்யப்பட்டது. எனினும் பிரதமர் அதனை மறுத்திருக்கிறார். மேலும், தன் சொந்த கட்சியிலேயே பிரதமருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.