“பெகாசஸ் உளவு மென்பொருளால் ஏற்பட்ட சர்ச்சை!”….. கடனில் மூழ்கிய நிறுவனம்…..!!

பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த N.S.O என்ற நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு விற்பனை செய்திருக்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை உளவு பார்த்தது உறுதி செய்யப்பட்டது.

எனவே, N.S.O நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்த உளவு மென்பொருளை விற்பனை செய்வதை நிறுத்தியதோடு, நிறுவனத்தை அடைக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 2 நிறுவனங்கள் உட்பட நிதி அளிக்கக்கூடிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தை தடுக்க உலக நாடுகளின் அரசாங்கத்திற்கு பெகாசஸ் மென்பொருளை விற்றதாக N.S.O நிறுவனம் விளக்கம் கூறியிருக்கிறது.

எனினும், அமெரிக்கா இந்நிறுவனத்தை தன் கருப்புப்பெட்டியில் வைத்திருக்கிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை N.S.O நிறுவனம் பயன்படுத்த தடை விதித்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதனால், இந்நிறுவனத்திற்கு, 450 மில்லியன் டாலர்கள் கடன் ஏற்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தை அடைக்க, உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதாக .

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad