யாழ்.உரும்பிராய் – மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் இன்று (04) இரவு மோதியதில் சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த, உரும்பிராய் அன்னங்கை பகுதியை சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கு கூடியோர், மல்லாகத்தை சேர்ந்த ஹைஏஸ் சாரதியை பிடித்து நயப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் பெருமளவு பொதுமக்கள் கூடியதால் பதற்றமான நிலையேற்பட்டது.
இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.
பின்னர் வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.