தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 40 வயதான லதா (40) என்பவர் அந்த பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் .அவர் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்து வந்தார் .இதனால் அவரின் முதல் கணவர் இவரின் திருட்டு தொழிலை கண்டுபிடித்து காண்டாகி அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார் .பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கொள்ளையடித்து வந்தார், அவர் சமீபத்தில் கொள்ளை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுவிட்டார்.
அடுத்து அந்த லதா மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் லதா ராமுவை மூன்றாவதாக மணந்து கொண்டு பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார் .
இந்த நிலையில், அந்த பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடப்பதால் அந்த பகுதி பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தம்பதியினரைத் தடுத்து நிறுத்திய போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிந்தது.அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது ,அவர் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட லதா என்பதை போலீசார் கண்டு பிடித்தனர் .அதையடுத்து, லதாவையும் அவரின் கணவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை கைப்பற்றியுள்ளனர்.