இங்கிலாந்தில் லாட்டரியை வெல்வதற்காக 19 வயது இளைஞன் ஒருவன் 2 சகோதரிகளை கொலை செய்துள்ளார். இதனையடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த 2 சடலங்களை பாதுகாக்க அவ்விடத்தில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 2 காவல்துறை அதிகாரிகள் தடுப்பை மீறி சடலங்கள் தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி அந்த புகைப்படத்தை வாட்ஸ்அப் குரூப்பில் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்கள். இது மிகப்பெரிய பிரச்சனையாகி பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை தற்போது விசாரணை செய்த நீதிபதிகள் தங்களுடைய வேலையை துஷ்பிரயோகம் செய்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 9 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளத