ஆண் நண்பர்களுடன் பேசுவதை கண்டித்ததால் ஆள் வைத்து தந்தையை கொன்ற மகளின் செயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அம் மாவட்டத்தில் குளச்சல் அடுத்த செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குமார் சங்கர், ராதாபுரம் பேரூர் திமுக துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இவரது மூத்த மகள் தீபாவதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து, பி.எட். பயிற்சிக்காக சென்று வந்திருக்கிறார். அப்போது அந்தப் பள்ளியில் கோபு என்ற இளைஞர் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பு முடிந்து திக்கணங்கோடு பகுதியில் உள்ள கணினி பயிற்சி பள்ளியில் தீபாவதி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் கோபுவும் கணினி பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்.
இதுதொடர்பாக கோபுவுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கிறார் தீபாவதி. அடிக்கடி ஆணுடன் செல்போனில் பேசுவதை கண்டு பிடித்த தந்தை குமார் சங்கர் இதை கண்டித்து சத்தம் போட்டிருக்கிறார். இதனால் எரிச்சலான தீபாவதி, தந்தையை கொன்று விடலாம் என்று கோபுவிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். உணவில் விஷம் மாத்திரைகளை கலந்து கொண்டு விடலாம் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கிய போது விஷ மாத்திரை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
பின்னர் கூலிப்படையை ஏவி கொலை செய்யலாம் என்று திட்டம் வகுத்து அதன்படி ஸ்ரீ முகுந்தன் என்ற வாலிபரையும் குமார் சங்கரை கொலை செய்ய அவர்கள் பேசியிருக்கிறார்கள். திட்டமிட்டபடி இரவில் குமார் சங்கர் வீட்டிற்கு வந்த அந்த முகுந்தன் பிளாக்கில் சரக்கு கேட்டிருக்கிறார். சரக்கெல்லாம் விற்பதில்லை என்று குமார்சங்கர் செல்லவும், தொடர்ந்து அவரிடம் சரக்கு கேட்டு தகராறு செய்திருக்கிறார் .
அதற்கு சத்தம் போட்டபடியே இங்கு சரக்கு விற்பதில்லை என்று அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக குமார் சங்கரை வெட்டி விட்டு தப்பி ஓடியிருக்கிறார் முகுந்தன். குமார் சங்கரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்திருக்கிறார் குமார்சங்கர்.
இதையடுத்து குளச்சல் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்த போலீசார், குமார் சங்கரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமார் சங்கரின் கொலை குறித்து முதலில் வீட்டினரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது மூத்த மகள் தீபாவதி அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவரிடமே திரும்பத்திரும்ப விசாரணை நடத்தியதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து தீபாவதி, கோபு, மற்றும் குமார் சங்கரை கொலை கொலை செய்துவிட்டு தூத்துக்குடியில் பதுங்கியிருந்த ஸ்ரீ முகுந்தன் ஆகியோரை கைது செய்து 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்