கிளிநொச்சியில் ஓரினச் சேர்க்கையாளரான அரச அதிகாரிக்கு எயிட்ஸ்?? மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்!!

கிளிநொச்சியில் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள முக்கிய அரச அலுவலகம் ஒன்றின் உயரதிகாரி ஒருவருக்கு எயிஸ்ட் நோயின் அறிகுறி காணப்படுவதாக அறிந்து அவரை பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்ட போது அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரியவருகின்றது.

உடலில் உள்ள தோல்களில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் தொடர்ச்சியான தாங்க முடியாத உடல் வலி என்பவற்றுடன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற போதே அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவருக்கு எயிட்ஸ் அறிகுறி இருப்பதை அவதானித்துள்ளார். இந் நிலையில் அவருக்கு எயிஸ்ட் பரிசோதனை செய்ய ஆயத்தமாகி அவருக்கு அதனை விளங்கப்படுத்தி எயிட்ஸ் நோயை குணமாக்கலாம் என கூறி பரிசோதனை செய்ய முற்பட்ட சமயம் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதனையடுத்து அவருடன் வைத்தியசாலைக்கு சென்ற மனைவிக்கு அவரது நோய் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது. கணவன் வெளியேறியதை அடுத்து மனைவி கணவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசிக்கு கணவன் பதிலளிக்கவில்லை . இந் நிலையில் கணவனை அழைத்துவருவதாகக் கூறுி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய மனைவி தாம் தங்கியிருந்த நெருங்கிய உறவினரின் வீட்டு அறையில் கணவனது தோல் வியாதிக்கு கொடுத்த ஒவ்வாமை குளிசைகளை அள்ளி விழுங்கி தற்கொலைக்கு முயன்று தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அரச அதிகாரிக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களின் தகவலின் படி குறித்த அதிகாரி ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் உடையவர் எனவும் இது தொடர்பா பல முறைப்பாடுகள் அவரது அலுவலகத்தில் உள்ளது எனவும் கணவனின் ஓரினச் சேர்க்கை நாட்டம் தொடர்பாக மனைவியும் அறிந்திருந்ததாகவும் நட்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அரச அதிகாரிக்கு அண்மையில் வயதுக்கு வந்த ஒரு பெண் பிள்ளை உட்பட 3 சிறு பெண் பிள்ளைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad