இங்கிலாந்து ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ். கூர்மையான கத்திகள் கொண்டு தாக்கினாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் தனித்துவமான டி-ஷர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் உடல் பாதுகாப்பு கவசம் என்று கூறப்படும் இந்த டி-ஷர்ட் கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த டி-ஷர்ட் பருத்தி இழையை விட வலிமையானதாக இருக்கும்.
ஆனால் சாதாரண குடிமக்களுக்கு கவசம் அல்லது துப்பாக்கி நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை தயார் செய்வதில்லை. இருப்பினும் இந்த பி.பி.எஸ்.எஸ். நிறுவனம் உங்களை கத்திகுத்து தாக்குதலிலிருந்து இந்த சிறப்பு டி-ஷர்ட் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரூ. 16 ஆயிரம் என்ற விலையில் இந்த டி-ஷர்ட் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு நபர் இந்த சிறப்பு வாய்ந்த டி-ஷர்ட் அணிந்தவரை கத்தியால் தாக்குகிறார். அதன் பிறகு அவர் போட்டிருந்த டி-ஷர்ட் அகற்றப்படுகிறது. ஆனால் அவருடைய உடலில் ஒரு கீறல் கூட இல்லை. எனவே கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினால் கூட அந்த தடிமனான டி-ஷர்ட்-ஐ அணிந்திருந்தால் உயிர் தப்பிக்க முடியும் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட்டுள்ளது.
This Carbon Fiber Body Armor Could Save You From Street Attacks. https://t.co/pmznBpUCMn via @FacebookWatch
— Arumugam (@Arumuga77776718) December 22, 2021