கள்ளக்காதலர்கள் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காதலியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிய காதலனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர் கிராமத்தினர். இச்சம்பவம் கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அடுத்த மாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. பழனி என்பவரின் மனைவியான இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேவ புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே மாமங்கலம் கிராமத்திற்குச் சென்ற திருநாவுக்கரசு செல்வியிடம் தகராறு செய்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடியிருக்கிறார்.
செல்வியின் அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். தப்பி ஓடிய திருநாவுக்கரசை கிராம மக்கள் மடக்கிப்பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து இருக்கிறார்கள்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.