தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவரை போலவே இருக்கும் ஒரு பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
மேலும், தீபாலி சவுத்ரி என்ற அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியை போலவே மேக்கப் போட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.