சென்னை அதிர்ச்சி: மகனை கொன்றுவிட்டு கணவன் – மனைவி தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவாஜி(43). இவரது மனைவி வனிதா(33) . அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகன். பத்து வயதான வெற்றிவேல் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சிவாஜி டைலர் வேலை பார்த்து வந்துள்ளார். வனிதா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனாலும் போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டதால் சிவாஜி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் சிவாஜியும், அவரது குடும்பத்தினர் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வனிதாவின் தாயருக்கு போன் செய்து இருக்கிறார்கள். அவர் உறவினருடன் வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது சிவாஜி தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்திருக்கிறார்.

தரையில் வனிதாவும் மகன் வெற்றிவேலுவும் சடலமாக கிடந்த இருக்கின்றனர். வனிதாவின் கழுத்தில் தூக்கு கயிறு அறுந்த நிலையில் இருந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் வத்சலா, புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர்.

வனிதா தூக்கில் தொங்கிய போது கயிறு அறுந்து கீழே விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். சிறுவன் வெற்றிவேல் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் ஆராய்ந்தனர். சிறுவனின் வெற்றி வேல் உடலில் எந்த காயமும் இல்லை. அதனால் சிறுவன் வெற்றி வேலை கொலை செய்துவிட்டு சிவாஜியும் வனிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சிவாஜியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது சிவாஜி எழுதிய கடிதமொன்று சிக்கியிருக்கிறது. அதில், கடன் தொல்லையால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களை மன்னிக்கவும் என்று எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்துசந்தேகம் ள்ளனர்.

வனிதாவின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சிவாஜிக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி நெருக்கடி கொடுத்து வந்தார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சல் இருந்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

சிவாஜிக்கு கடன் கொடுத்தவர்கள் யார் யார்? அவர்களின் நெருக்கடி கொடுத்து மிரட்டல்கள் கொடுத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad