திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம். இவர் பாடிய ‘கண்ணுக்குள்ள ஒருத்தி, விடை கொடு எங்கள் நாடே, வண்டி வண்டி உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.
சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இவர் பாடிய தெய்விக பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் மாணிக்க விநாயகம்.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவருடைய மரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.