இந்த ஆண்டில் இதுவரையில் 825 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் மட்டும் மத்திய வங்கி 202 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.
இதேவேளை, 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகளையும் அரசாங்கம் நேற்று வெளியிட்டிருந்தது. இதில் 33.5 பில்லியன் ரூபா விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வட்டி வீதம் மற்றும் அந்நிய செலாவணி தொகை என்பனவற்றை கட்டுப்படுத்துவதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி பணிப்பாளர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.