முதலிடம் பெற்ற ரொரன்றோ: புலம்பெயர விரும்பும் பெண்களுக்கும் ஒரு நல்ல செய்தி

கனடாவின் ரொரன்றோ, பெண்கள் பணி தொடர்பிலான தரவரிசைப்பட்டியல் ஒன்றில் முதலிடம் பிடித்துள்ளது. Bloomberg என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பணி செய்யும் பெண்களின் வாழ்க்கைத்தரத்தில் ரொரன்றோ நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

பணி செய்ய முடிவு செய்யும் பெண்களின் வாழ்க்கைத்தரம் உலகிலுள்ள 15 நாடுகளில் எந்த வகையில் உள்ளது என்பது தொடர்பில், Bloomberg நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

ஆய்வில் ஐந்து முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன: அவையாவன பாதுகாப்பு, போக்குவரத்து, தாய்மை குறித்த விடயங்கள், சமத்துவம் மற்றும் செல்வம் ஆகிய விடயங்கள் ஆகும்.

15 நாடுகளிலுள்ள 3,000க்கும் அதிகமான 18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையிலுள்ள பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றார்கள்.

இந்த ஆய்வில், ரொரன்றோ முதலிடத்தைப் பிடித்தது. அது, சமத்துவம், தாய்மை தொடர்பான விடயங்கள், செல்வம் ஆகிய இடங்களில் நல்ல புள்ளிகளைப் பெற்றது. ஆனால், போக்குவரத்திலோ, மோசமான இடத்தைப் பிடித்தது.

ரொரன்றோவைத் தொடர்ந்து, சிட்னி, சிங்கப்பூர், பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

குறிப்பாக இந்த விடயம், கனடாவுக்கு புதிதாக வருவோருக்கும் ஒரு நல்ல விடயமாகும்.

பொதுவாகக் கூறினால், கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் பலர், தங்களால் வேலைக்கு செல்வதற்கு உகந்த வயதில்தான் கனடாவுக்கு வருகிறார்கள். ஆகவே, ஆண்களைப் போலவே, பெண்களும் தங்கள் திறமையால் பணி ஒன்றில் சேர்ந்து சமூக பொருளாதார ரீதியில் உயர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால், அது மிகையாகாது.

பொருளாதார புலம்பெயர்வோராக பொதுவாக ஆண்கள் பெரும்பாலும் கனடாவுக்கு வரவேற்கப்பட்டாலும், அவர்களுக்கு இணையாக பெண்களின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த விடயம், பெண்களுக்கும் கனேடிய சட்டமியற்றுவோருக்கும் இன்றியமையானதாகும்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் பெண், கனடாவுக்கு புலம்பெயர விண்ணப்பித்த ஆணின் மனைவிதான் என்றாலும், அவர்களுக்கும் அவர்களது துணைவரைப் பிரதிபலிக்கும் முக்கிய பணி தொடர்பிலான குணாதிசயங்கள் இருப்பதாக கனேடிய அரசின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆகவே, அவர்களுக்கும் கனேடிய தொழிலாளர் சந்தையில் சரியான அளவில் இடமளிக்கவேண்டும் என பெண்களும் கனேடிய சட்டமியற்றுவோரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆக, கனடாவில் ஏராளம் வேலை வாய்ப்பு உள்ளது. அதை கனடா நிரப்பவேண்டும். தற்போது கனடாவில் சுமார் ஒரு மில்லியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளிலும் சுமார் 9 மில்லியன் பேர் ஓய்வு பெறும் நிலையில், ஏற்கனவே கனடாவுக்கு வந்துள்ள பெண்கள், புதிதாக வரும் பெண்கள், பூர்வக்குடியினர், இளைஞர்கள் (அவர்களுக்கு உடற்குறைபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை), என பலதரப்பட்டவர்களில், தகுதியானவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்பவேண்டிய தேவை சட்டமியற்றுவோருக்கும் பணி வழங்குவோருக்கும் உள்ளது.

நமக்கும் நல்ல செய்திதானே!

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad