கஞ்சா கடத்திய சந்தேகத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த இருவரும் கடலுக்கு சென்று திரும்பி வரும் வேளையில் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.
இதன்போது கடற்படையினரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் அவ்விடத்தில் நின்றனர். இந்நிலையில் கடலில் மிதந்து வந்த, சுமார் 276 கிலோ கஞ்சாவை அவர்கள் கடத்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பயணித்த படகு சிறியது. அந்தப்படகில் தொழில் முதல்கள் இருந்தன. இந்நிலையில் 276 கிலோ கஞ்சா அவ்வாறு அந்த படகில் கொண்டு வருவது?
அத்துடன் அவர்கள் பயணித்த படகின் ஜி.பி.எஸ்ஸினை பார்த்தால் அவர்கள் பங்கு சென்றுள்ளார்கள் கஞ்சா கடத்தும் இடத்துக்கு சென்று உள்ளார்களா என தெரியவரும்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர், “நீங்கள் காணி சுவீகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தானே” எனக்கு ஈவிரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர். நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்ற வேளை அவர்கள் எமக்கு விடயத்தை கூறியுள்ளார்கள்.
எனவே கைது செய்யப்பட்டவர்களை சரியாக விசாரணை செய்து உண்மைத் தகவலை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post கஞ்சா கடத்தியதாக கைதானவர்களிற்கு ஆதரவாக போராட்டம்! appeared first on Pagetamil.