மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ண கோபால்தாஸ் . இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவரை திருமணம் செய்திருக் கிறார்.
திருமணத்திற்குப் பின்னர் கிருஷ்ணகோபால் தாஸ் பிரியங்கா தாசிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே பஞ்சாயத்து நடந்து இருக்கிறது. அதில் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு தகராறு செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சில காலம் மாமியாரின் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று முடிவாகி இருக்கிறது.
எங்கள் கண் முன்னாலேயே நாங்க வைத்து பார்க்க வேண்டும். அதில் மருமகன் நல்ல விதமாக நடந்து கொண்டால் அதன் பின்னர் நாங்களே பார்த்து தனிக்குடித்தனம் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதன்படி கிருஷ்ண கோபால் தாஸ் பிரியங்கா வீட்டிலேயே சென்று தங்கி இருந்திருக்கிறார் . வீட்டோடு மாப்பிள்ளையாக சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறார் .
வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மாமியாருடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கம் கள்ள உறவாக மாறியிருக்கிறது. மனைவிக்கு தெரியாமலேயே மாமியாருடன் மூன்று ஆண்டுகள் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார் கிருஷ்ணகோபால். அதன்பின்னர் இவர்கள் இருவரின் நடத்தையிலும் மாறுதல்களை கண்ட பிரியங்கா தாஸ் தனது தாய்க்கும் கணவருக்கும் உறவு இருப்பதை உணர்ந்து நேரடியாகவே கவனித்திருக்கிறார்.
இதையடுத்து தாயாரிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். கணவருடன் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இதனால் கிருஷ்ணகோபால் தாஸ் தனது மாமியாருடன் கலந்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதற்கு மேல் இங்கு இருந்தால் நம் உறவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டு நம்மை பிரித்து வைத்து விடுவார்கள் என்று பேசி அதனால் வீட்டை விட்டு ஓடிப் போய்விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படியே மருமகனை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் நடத்த தொடங்கியிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா தாஸ், தன் கணவனை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு தந்தையுடன் சென்று போலீசில் கண்ணீருடன் புகார் அளித்திருக்கிறார்.