தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு(90) இன்று காலமானார். இதுகுறித்து தென்னாபிரிக்க அதிபர் சிரில் றார்மபோசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தார்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நீண்ட காலம் போராடி நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த சிறந்த ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும் தருணம் என்று அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்ற போது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி டுட்டு பிரபலப்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால் 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து டெஸ்மண்ட் டுட்டு மறைவிற்கு பிரதமர் மோடி, உலக மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்